பரிசங்குளம் குருவிச்சையாறு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த நிலையில் 135000 மில்லிலீற்றர் கோடா, செப்புச்சுருள், பரல் என்பன நேற்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி. சுபேசனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சுபேசன் தலைமையிலான பொலிசார் நேற்று (05.06.2025) மாலை பரிசங்குளம் குருவிச்சையாறு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் உற்பத்திக்கு தயாராக இருந்த நிலையில் 135000 மில்லிலீற்றர் கோடா, செப்புச்சுருள், பரல் என்பன ஒட்டுசுட்டான் பாெலிஸாரினால் கைப்பற்றப்பட்ட நிலையில் முள்ளியவளை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.
குறித்த சந்தேக நபரினை தேடி வருவதாகவும், குறித்த சம்பவம் தாெடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஒட்டுசுட்டான் பாெலிஸார் தெரிவித்தனர்.

