செம்மணிப் புதைகுழி தொடர்பான விசாரணை நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் நீதி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:-
“செம்மணிப் புதைகுழி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், துரிதமாக விசாரணைகளும் இடம்பெறும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டிய விடயத்தின் முக்கியத்துவத்தையும் உணர்கின்றேன். இதன்படி இது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் விளக்கமளிப்பேன்.” – என்றார்.