மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெரிய மனிதர்களின் சந்திப்பு நன்மையை செய்யும். மதிப்பு மரியாதையும் கூடும். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாள் துயரங்கள் துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அதீத சிந்தனை இருக்கும். மனது ஒரு நிலையாக இருக்காது. அலைபாய்ந்து கொண்டே இருக்கும். எந்த முடிவு எடுப்பது என்று சில தடுமாற்றங்கள் இருக்கும். ஆகவே, இந்த நாளில் புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். இறைவழிபாட்டில் மனதை ஈடுபடுத்துங்கள். நல்லதே நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும். முதலில் தோல்வியை கண்டு பயப்படக்கூடாது. தோல்வியை எதிர்த்து போராடும் மன தைரியம் உங்களிடம் இருந்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை சீரான போக்கு நிலவும். புதிய முதலீட்டுக்காக வங்கி கடன் முயற்சி செய்யலாம். நல்லது நடக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை கவனத்தோடு இருக்க வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகாத உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டாம். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். தீராத பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். கடன் சுமை குறையும். நிதி நிலைமை சீராகும். மாணவர்கள் எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் இருப்பீர்கள். முயற்சிகளில் சின்ன சின்ன தடைகள் ஏற்படலாம். இருந்தாலும் விடா முயற்சி மாணவர்களுக்கு நல்ல வெற்றியை கொடுக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நன்மைகள் வீடு தேடி வரும். வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு காரர்களுக்கு இன்று பாசம் வெளிபடும் நாளாக இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலையில் நிதானதோடு இருக்க வேண்டும். யாரையும் எளிதில் பகைத்துக் கொள்ள வேண்டாம். ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று ஐந்து நிமிடம் மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்யுங்கள் முன்கோபம் குறையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று அயராது உழைப்பீர்கள். உங்களுடைய கடமைகளில் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்வீர்கள். நண்பர்களோடு மனது விட்டு பேசுவீர்கள். மன பாரம் குறையும். உழைப்புக்கேற்ற பலனும் நல்ல பெயரும் உங்களுக்கு கிடைக்கும். இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த நல்லதோடு எதிர்பாராத நல்லதும் சேர்ந்து நடக்கும். ஒரு ரூபாய்க்கு ஆசைப்பட்டால் பத்து ரூபாய் உங்கள் கையை வந்து சேரும். மாணவர்கள் கலைஞர்கள் என்று சாதனை படைக்க கூட வாய்ப்புகள் இருக்கு. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அதிக முன்கோபம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மேலதிகாரிகளோடு அனாவசியமாக வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். அக்கம் பக்கத்தினருடன் நல்ல உறவு வைத்துக் கொள்ளுங்கள். யாரையும் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்காதீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கும் நாளாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல உயர்வு ஏற்படும். மேலதிகாரிகளுடைய நம்பிக்கையை பெறுவீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். சில பேருக்கு பாராட்டு விழா நடப்பதற்கு கூட வாய்ப்புகள் இருக்கிறது. என்ஜாய் பண்ணுங்க. கடவுளுக்கு நன்றி சொல்லுங்க.