சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்வு இன்று (05) கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் முதல்வர் பேராசிரியர் தட்சிணாமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பிரதம அதிதியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி முகாமையாளர் தி.ஸ்ரீபதி மற்றும் அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் சந்திரவதனி தேவதாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இதன்போது பிரதம அதிதியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி முகாமையாளர் தி.ஸ்ரீபதி அவர்கள் சுற்றுச்சூழல் சம்பந்தமான சொற்பொழிவு ஒன்றினை ஆற்றினார்.
மேலும் சுற்றுச்சூழல் சம்பந்தமான போட்டிகள் நடைபெற்று போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



