நூலக நிறுவனமும், யாழ்ப்பாணம் பொதுநூலகமும் எண்ணிமயப்படுத்தல் (டிஜிட்டல் மயமாக்கல்) செயற்றிட்டத்தை எதிர்காலத்தில் இணைந்து செயற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (05.06.2025) நடைபெற்றது.
இதன்போது நூலக நிறுவனம் இதுவரை முன்னெடுத்துள்ள செயற்பாடுகள், எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் எண்ணிமயப்படுத்தல் செயற்றிட்டத்தை இணைந்து செயற்படுத்துவதன் ஊடாக கிடைக்கும் நன்மைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் ஆலோசனைக் குழு மற்றும் மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளுடன் எதிர்காலத்தில் கலந்துரையாடி தொடர் நடவடிக்கை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.


