கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (05) திருகோணமலையில் மான் பூங்கா பகுதியில் (சங்கமித்தா அருகில்) அமைந்துள்ள கடற்கரையோரத்தை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி முகாமையாளர் தி.ஸ்ரீபதி அவர்களின் ஒருங்கிணைப்பில் லங்கா IOC இன் பங்களிப்புடன் நடைபெற்றது.
இதன்போது பட்டினமும் சூழழும் பிரதேச செயலாளர் நா.மதிவண்ணன் அவர்கள் பிரதமர் அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
“பிளாஸ்டிக் மாசுபாட்டினை முடிவுக்கு கொண்டு வருதல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது நகராட்சி மன்ற செயலாளர் தே.ஜெயவிஷ்ணு, லங்கா IOC நிறுவனத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர், கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், IOC நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், Rotary Club இன் உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



