பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் அரச வங்கியின் பெண் அதிகாரிகள் மூவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும் அரச வங்கியின் அடகுப் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் 24 கரட் தங்கம் எனக் கூறி போலியான தங்க நகைகளை விற்பனை செய்து 99.3 மில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மோசடியுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் வெளிநாடு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ADVERTISEMENT
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.