• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 17, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அரச காணியை தனியாருக்கு சுவீகரிக்கும் முயற்சி பிரதேச மக்களால் முறியடிப்பு.!

Mathavi by Mathavi
June 5, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
அரச காணியை தனியாருக்கு சுவீகரிக்கும் முயற்சி பிரதேச மக்களால் முறியடிப்பு.!
Share on FacebookShare on Twitter

யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியில் அரச காணியை தனி நபருக்கு சுவீகரிக்கும் முயற்சி இன்று (5)அப்பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டது.

இது குறித்து தெரியவருவதாவது,

Sk farm எனப்படும் தனியார் நிறுவனத்திற்கு தாளையடி பகுதியில் அரச காணியினை அளக்க முற்பட்ட வேளை ஒரு சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி மக்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதன்போது குறித்த தனியார் நிறுவன அதிகாரிகள் கிராம அலுவலர், சமூக மட்ட அமைப்புகளோடு மீண்டும் கலந்துரையாடி எமது திட்டத்தின் பயன்களை எடுத்துக் கூறி கிராம மக்களின் அனுமதியுடன் குறித்த செயற்றிட்டத்தை செயற்படுத்துவதாக கூறிச் சென்றார்கள்.

இன்றுவரை கலந்துரையாடலை மேற்கொள்ளாத நிலையில் குறித்த தனியார் நிறுவன அதிகாரிகள் நில அளவைத் திணைக்களத்தினருடன் மிகவும் இரகசியமாக அரச காணியை அளப்பதற்காக தாளையடி பிரதேசத்திற்கு வருகை தந்தனர்.

இதனை அறிந்த கிராம மக்கள் கிராம மட்ட அமைப்புகளின் உதவியுடன் அப்பகுதிக்கு சென்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் போது நில அளவைத் திணைக்களத்தினர் தாங்கள் பொலிஸாரின் உதவியுடன் வந்து மீண்டும் இந்த இடத்தை அளவீடு செய்வதாக கூறி அவ்விடத்தை விட்டுச் சென்றார்கள்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அப்பகுதி மக்கள்,

சில மாதங்களுக்கு முன்பு இந்த முயற்சி எமது பிரதேசத்தில் எடுக்கப்பட்ட போது அதனை நாங்கள் முற்றாக தடுத்து நிறுத்தினோம்.

அப்போது நாங்கள் அவர்களுக்கு கூறிய விடயம் என்னவென்று சொன்னால் நாங்கள் சமூகமட்ட அமைப்புகள் மற்றும் கிராம அலுவலர் உடன் கலந்துரையாடி இந்தத் திட்டத்தால் மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைத்தால் நாங்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தோம்.

இதற்கான கலந்துரையாடலை அவர்கள் ஒழுங்கு செய்வார்கள் என்று நாம் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் இன்று முற்பகல் 10:30 மணி அளவில் நில அளவை திணைக்களத்தினருடன் குறித்த தனியார் நிறுவன அதிகாரிகள் எமது பிரதேசத்தின் நிலப்பரப்பை அளவீடு செய்வதற்காக வருகை தந்தார்கள்.

அங்கு வந்திருந்த நில அளவை திணைக்களத்தினர் அதிகாரிகளுடைய அனுமதியுடன் தான் அங்கு வந்திருப்பதாக தெரிவித்திருந்தார்கள். ஆனால் இது சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற போது இதற்கு நாங்கள் ஒரு கலந்துரையாடல் இல்லாமல் அனுமதி வழங்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தோம்.

எமது பிரதேசத்தில் பல குடும்பங்கள் புதிதாக திருமணம் முடித்து காணி அற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு காணி பகிர்ந்து கொடுப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் பிரதேச செயலகத்தால் எடுக்கப்படவில்லை.

எமது பிரதேசத்தில் இருக்கின்ற அரச காணிகள், வனஜுவராசிகள் திணைக்கள காணிகள் தொடர்பான வரைபடத்தை எங்களுக்கு தருமாறு பிரதேச செயலரிடம் கூறி இருந்தோம் ஆனால் அவர் இன்றுவரை தரவில்லை.

நில அளவை திணைக்களத்தினருக்கும், பிரதேச செயலருக்கும் ஒரு கடிதம் கையளித்திருக்கிறோம். குறித்த திட்டத்தினை நாங்கள், எமது மக்கள் முற்றாக நிராகரிக்கிறோம்.

எமது நாட்டினுடைய பொருளாதாரத்திற்கும் வளர்ச்சிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல அவர்கள் கூறியது போன்று எங்களது மக்களுடன் கலந்துரையாடாமல் இதனை அளவீடு செய்ய முயற்சித்ததால் நாங்கள் இந்த திட்டத்திற்கு முற்றாக தடை விதிக்கிறோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Posts

மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினைப் பாராட்டி கெளரவிப்பு..!

மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினைப் பாராட்டி கெளரவிப்பு..!

by Thamil
June 16, 2025
0

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினைப் பாராட்டி கெளரவமளிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளார்....

முஸ்லிம் காங்கிரஸ் வசமானது ஓட்டமாவடி பிரதேச சபை..!

முஸ்லிம் காங்கிரஸ் வசமானது ஓட்டமாவடி பிரதேச சபை..!

by Thamil
June 16, 2025
0

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் கோரளைப்பற்று பிரதேச சபையில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பாண்மை பெற்றுக் கொள்ளாததால் சபைக்கான தவிசாளர், பிரதித்...

மக்கள் எரிபொருளைப் பெற முண்டியடிப்பு ; அரசு விடுத்த கோரிக்கை..!

மக்கள் எரிபொருளைப் பெற முண்டியடிப்பு ; அரசு விடுத்த கோரிக்கை..!

by Thamil
June 16, 2025
0

இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையிலான யுத்தம் உக்கிரமடைந்து வரும் வேளையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு வரலாம் என அஞ்சி மக்கள் எரிபொருளை பெற முண்டியடித்து வருகின்றனர். இதனால் எரிபொருளுக்கு செயற்கை தட்டுப்பாடு...

பாடசாலையில் நிலவும் கட்டிட பற்றாக்குறை ; கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு..!

பாடசாலையில் நிலவும் கட்டிட பற்றாக்குறை ; கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு..!

by Thamil
June 16, 2025
0

மூதூர் மத்திய கல்லூரியில் நிலவும் கட்டிட பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறும், புதிய கட்டிடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு வழியுறுத்தி இன்று திங்கட்கிழமை (16)...

தேசபந்து தொடர்பான இறுதி அறிக்கை..!

தேசபந்து தொடர்பான இறுதி அறிக்கை..!

by Thamil
June 16, 2025
0

தேசபந்து தென்னகோன் மீதான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு, இன்று (16) முதல் விசாரணை முடியும் வரை தினசரி கூடுவதற்கு முடிவு செய்துள்ளது....

பண்டிதர் பரந்தாமனின் இறுதி நினைவேந்தல்..!

பண்டிதர் பரந்தாமனின் இறுதி நினைவேந்தல்..!

by Thamil
June 16, 2025
0

தாயகத்தின் முதுபெரும் கலை இலக்கிய பேராளரும், கல்விசார் ஆசிரியரும், பால பண்டிதர் மொழி ஆய்வாளர், கவிஞர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர் எனப் பேராளுமை கொண்ட பண்டிதர் வீரகத்திப்பிள்ளை...

கடலுக்குச் சென்ற இருவர் மாயம்..!

கடலுக்குச் சென்ற இருவர் மாயம்..!

by Thamil
June 16, 2025
0

மொரட்டுவை - எகொட உயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் மீனவ துறைமுகத்துக்கு அருகில் இன்று (16) மீன்பிடிப்பதற்காக இரு மீனவர்கள் கடலுக்குச் சென்று கரைக்கு திரும்பிய நிலையில்...

வடமராட்சியில் இடம்பெற்ற விபத்து.!

வடமராட்சியில் இடம்பெற்ற விபத்து.!

by Mathavi
June 16, 2025
0

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரை அதிவேகமாக வந்த வாகனம் பின்னால்...

இரு கடைகள் தீயில் எரிந்து நாசம்; விசேட சோதனை நடவடிக்கையில் தடயவியல் பொலிஸார்.!

இரு கடைகள் தீயில் எரிந்து நாசம்; விசேட சோதனை நடவடிக்கையில் தடயவியல் பொலிஸார்.!

by Mathavi
June 16, 2025
0

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இரு கடைகள் தீயில் முற்றாக எரிந்த நிலையில் அச்சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு கிச்சிராபுரம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி