• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தற்போது நடப்பது கதிரைக்கான பேரம் பேசுதல்.!

Mathavi by Mathavi
June 5, 2025
in இலங்கை செய்திகள்., வவுனியா செய்திகள்
0
தற்போது நடப்பது கதிரைக்கான பேரம் பேசுதல்.!
Share on FacebookShare on Twitter

தற்போது நடக்கின்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சபைகளில் யார் ஆட்சியமைப்பது என்ற கதிரைக்கான பேரம்பேசுதல் பற்றியதே. அதனை ஜ.த.தே.கூட்டணியின் செயலாளர் ரட்ணலிங்கம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் நலன்களை முன்நிறுத்தி பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதானால் தேர்தலுக்கு முன்னரே அதனை செய்திருக்கலாம்.தேர்தலில் இணைந்தும் போட்டியிட்டிருக்கலாம் என்று தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஜ.த.தே.கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய பேரவைக்கு இடையிலான ஒப்பந்தம் பற்றியும், குறித்த இரு தரப்புக்களுடனும் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறதா என வவுனியாவில் ஊடகங்களிற்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய பேரவை ஆகிய இரண்டு தரப்பினரோடும் கடந்த நாட்களிலே பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம்.

எந்த கட்சிக்கு அதிகூடிய ஆசனங்கள் இருக்கிறதோ அந்த கட்சி ஆட்சியமைப்பதற்கு மற்றைய கட்சிகள் உதவி புரியவேண்டும் என்பது எமது கோட்பாடு. இருதரப்பும் அந்த கோட்பாட்டை முழுமையாக ஏற்றிருந்தார்கள்.

ஆனால் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை பொறுத்தவரை இப்படி அமைந்தால் ஒரு சபையில் மாத்திரமே தாங்கள் ஆட்சி அமைக்க முடியும் என சொன்னார்கள். எனவே வேறு சில சபைகளிலும் நல்லெண்ண அடிப்படையில் தாங்கள் ஆட்சி அமைக்க உதவி செய்யுமாறு கேட்டார்கள். நாங்கள் அதனை நிராகரிக்கவில்லை. அது குறித்து பேசியிருந்தோம். மாந்தை மேற்கில் அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டு ஆட்சியை சமனாக பகிர்வதாக இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இந்த சூழ்நிலையில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக அறிகிறோம். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் செயலாளர் வவுனியாவில் வைத்து சில விடயங்களை சொல்லியிருக்கிறார். சபைகளில் தாங்கள் நிர்வாகத்தை அமைக்கவேண்டும் என்ற ஆர்வத்தோடு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளதாக வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அதற்கு நன்றிகள்.

தற்போது நடக்கின்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சபைகளில் யார் ஆட்சியமைப்பது என்பது பற்றியதே. தமிழ் மக்களின் நலன்களை முன்நிறுத்தி பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதனால் தேர்தலுக்கு முன்னரே அதனை செய்திருக்கலாம். இணைந்தும் போட்டியிட்டிருக்கலாம்.

தேர்தல் நேரத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிவிட்டு. நாங்கள் இந்த இரு தரப்பையும் தாக்கவில்லை. ஆனால் அவர்களில் சிலர் எங்களை தாக்குவதையே தொழிலாக கொண்டிருந்தார்கள். அதை செய்தார்கள். அனால் நாங்கள் பேரினவாதகட்சி இங்கு கால் பதித்துவிடக்கூடாது என்று அரசாங்க கட்சியை மும்முரமாக தாக்கியே பிரச்சாரத்தை நடத்தினோம்.

அந்தநிலையில் 35 சபைகளில் நாங்கள் ஆட்சியமைக்கக்கூடிய அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளோம். அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகள் உதவ வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கோட்பாடாக உள்ளதாக அவர்கள் முன்னரே அறிவித்தார்கள்.

எனவே அந்த கோட்பாட்டின் படி அவர்கள் நடந்துகொள்வார்கள் என எதிர்பார்கிறோம். இணைந்து செயற்படுவது தொடர்பாக ஏனைய சந்தர்பங்களில் பேசலாம். தற்போது நடப்பது கதிரைக்கான பேரம் பேசுதல். அதனை திரு. ரட்ணலிங்கம் தெளிவாக சொல்லியிருக்கிறார். அது அனைவருக்கும் தெரியும். நாங்கள் அதில் கரிசனை காட்டவில்லை.

எனவே இணைந்து செயற்படுவதை விட இந்த சின்ன சின்ன கதிரை விடயங்களிலாவது உண்மைத்தன்மை இருக்கிறதா என்று முதலில் பார்போம். உண்மை இல்லாமல் கதிரை தான் முக்கியம் என எவரோடும் கூட்டு வைக்கலாம் என்று செயற்படுவார்கள் என்றால் இணைந்து செயற்படுவது தொடர்பாக நாங்களும் சிந்திக்க வேண்டியிருக்கும். என்றார்.

Related Posts

போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் இருவர் கைது.!

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது.!

by Mathavi
May 9, 2026
0

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு...

யாழ். போதனா வைத்தியசாலையின் எரிந்த பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டில்.!

யாழ். போதனா வைத்தியசாலையின் எரிந்த பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டில்.!

by Mathavi
May 9, 2026
0

யாழ். போதனா வைத்தியசாலையின் தீக்கிரையான மருந்துக் களஞ்சியப் பகுதி, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் ஆய்வுகள் நிறைவடையும் வரை பொலிஸாரின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்...

உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு யாழில் மரநடுகை நிகழ்வு.!

உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு யாழில் மரநடுகை நிகழ்வு.!

by Mathavi
May 9, 2026
0

உலக செஞ்சிலுவை தினத்தை சிறப்பிக்கும் முகமாக, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளையினரால் இன்றைய தினம் விசேட மரநடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம்...

இது சதியா? தற்செயலா? – யாழ். வைத்தியசாலை தீ விபத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.!

இது சதியா? தற்செயலா? – யாழ். வைத்தியசாலை தீ விபத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.!

by Mathavi
May 9, 2026
0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகள் பல ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும்...

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளை இளைஞர் அணி தலைவராக ஊடகவியலாளர் லின்ரன் தெரிவு.!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளை இளைஞர் அணி தலைவராக ஊடகவியலாளர் லின்ரன் தெரிவு.!

by Mathavi
May 9, 2026
0

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளை இளைஞர் அணியின் புதிய நிர்வாகத் தெரிவு இன்று சனிக்கிழமை (09) காலை 10:30 மணியளவில் யாழ் கிளைத் தலைமைச் செயலகத்தில்...

வாக்குமூலம் கேட்டு கபில மீது சித்திரவதை.!

வாக்குமூலம் கேட்டு கபில மீது சித்திரவதை.!

by Mathavi
May 9, 2026
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு வாக்குமூலம் அளிக்குமாறு கபில சந்திரசேனவுக்குப் பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர்...

முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. கடும் சந்தேகம்.!

முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. கடும் சந்தேகம்.!

by Mathavi
May 9, 2026
0

அரச திறைசேரி நிதி மோசடி மற்றும் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து அரசு உடனடி மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை...

இந்திர விழாவில் சுகாதார சீர்கேடு; 6 வியாபாரிகளுக்கு பிடியாணை.!

இந்திர விழாவில் சுகாதார சீர்கேடு; 6 வியாபாரிகளுக்கு பிடியாணை.!

by Mathavi
May 9, 2026
0

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை இந்திர விழாவின் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்பட்ட 6 உணவு நிலைய உரிமையாளர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் அறுவருக்கு ஒரு இலட்சத்து...

முல்லைத்தீவில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள்.!

முல்லைத்தீவில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள்.!

by Mathavi
May 9, 2026
0

சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள் முல்லைத்தீவில் இடம்பெற்றது. முல்லை மாவட்டத்தின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈரான், ரஷ்யா, அமெரிக்கா...

மகளையும், பேரப்பிள்ளையையும் காணவில்லை என தாய் பொலிஸில் முறைப்பாடு.!

மகளையும், பேரப்பிள்ளையையும் காணவில்லை என தாய் பொலிஸில் முறைப்பாடு.!

by Mathavi
May 9, 2026
0

கணவருடன் சென்ற மகள் மற்றும் 10 மாதம் நிரம்பிய பேரப்பிள்ளை ஆகிய இருவரும் காணாமல் போயுள்ளதாக குறித்த பெண்ணின் தாய் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி