உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை பிரதேச சபையானது கடந்த 30 ம் திகதியில் இருந்து பல்வேறு சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளை செய்து வருகின்றது.
இதன் அடிப்படையில் இன்று காலை 9 மணியளவில் பருத்தித்துறை பிரதேச சபையின் செம்பியன்பற்று உப கிளையானது கரையோர வலயங்களை தூய்மைப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் தாழையடி பிரதான கடற்கரை சிரமதானம் செய்யப்பட்டது.
சிரமதான பணியில் செம்பியன்பற்று உப அலுவலக பொறுப்பதிகாரி மற்றும் வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மருதங்கேணி பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தாழையடி கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT

