கிளிநொச்சி கரைச்சி கோட்டப் பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டி நேற்று 04.06.2025 பிற்பகல் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கரைச்சி கோட்டக்கல்விப்பணிப்பாளர் சுப்பிரமணியம் தர்மரத்தினம் தலைமையில் நடைபெற்ற குறித்த விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் D.M.அசேல, கே.திஸாநாயகே அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பாலஸ்கந்தன் உபேந்திரா (முகாமையாளர், இலங்கை வங்கி. கிளிநொச்சி), பரராஜசேகரம் பார்த்தீபன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர் உடற்கல்வி), கௌரவ விருந்தினர்களாக அன்னலட்சுமி ஏரம்பு (அன்னையின் கரங்கள்), நிறஞ்சன் டேகலா (இணைப்பாளர் SJC 87 Initiative), தியாகேஸ்வரி கணேஸ்வரநாதன் (ஓய்வுநிலை பிரதி அதிபர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







