மியன்மார்,ஈரான், ஆப்கானிஸ்தான் உட்பட 12 நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், கொங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.
கியுபா உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வது தொடர்பில் பல கட்டுப்பாடுகளையும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவினதும் அதன் மக்களினதும் தேசிய பாதுகாப்பு நலன்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்யும் எனது கடமையை நான் நிறைவேற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.