மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் நல்லது நடக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வெளியில் சொல்ல முடியாத கஷ்டங்களை இறைவனிடம் சொல்லி, உங்கள் மன பாரத்தை இறக்கிக் கொள்ளுங்கள்.வேலையிலும் வியாபாரத்திலும் கண்ணியத்தோடு நடந்து கொள்ளுங்கள். யாரையும் ஏமாற்ற வேண்டும் என்று நினைக்காதீர்கள். நிச்சயம் இந்த நாள் இனிய நாளாக அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும் எதிலும் பெரியதாக ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்து கொள்வீர்கள். சில பேருக்கு நிதிநிலைமை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு காணப்படும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்க வேண்டாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் சின்ன சின்ன சிரமங்கள் வரும். நண்பர்களோடு சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். மேல் அதிகாரிகளோடு பணிவாக பேசுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்திலும் நிதானம் தேவை.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று ரொம்பவும் அசதி நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வேலைபளு என்னமோ குறைவாகத்தான் இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் ஓய்வு தேவைப்படும். கவலைப்படாதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசி காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எந்த இடத்திலும் உங்களுக்கு ஒரு நிமிடம் கூட ஓய்வு இருக்காது. புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் நல்ல அனுபவங்களை கொடுக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற நஷ்டங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கல் வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வியாபாரத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். கணக்கு வழக்கை ஒன்றுக்கு நான்கு முறை சரிபார்க்கவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக பிரச்சனை இருக்காது. பிரச்சனைகள் வந்தாலும் சமாளித்துக் கொள்வீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் இரட்டிப்பாக இருக்கும். தேவைக்கு அதிகமாகவே பணம் கையை வந்து சேரும். உங்களுடைய கடன் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வீர்கள். சேமிப்பை உயர்த்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொருளாதார நிலை சீர்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். உங்களுடைய வேலைகளை சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருக்கும் அளவுக்கு உங்களுடைய நடவடிக்கை இன்று அமையும். வீட்டில் பொன் பொருள் சேர்க்க இருக்கும். வாழ்க்கை துணையோடு நல்ல நெருக்கம் ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். வியாபாரத்தை பொறுத்த வரை நிதானமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் வேண்டாம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கோபம் கொஞ்சம் அதிகமாக வரும். இதனால் சின்ன சின்ன இழப்புகள் ஏற்படும். நிம்மதி கெட்டுப் போக வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். பிள்ளைகளிடம் உங்களுடைய பிரச்சனைகளை கொண்டு போக வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் அதிகமாக ஈடுபாட்டோடு நடந்து கொள்வீர்கள். மேல் அதிகாரிகளுடைய பாராட்டை பெறுவீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை கொஞ்சம் மந்தமான போக்கே நிலவும். பார்ட்னரோடு சின்ன சலசலப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.