கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் தலைவர் திருமதி. செவரின் சப்பாஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், கிழக்கு மாகாணத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகள் குறித்து விளக்கப்பட்டதுடன், ஆளுநர் அதைப் பாராட்டினார். மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும், செஞ்சிலுவைச் சங்கத்தின் எதிர்கால செயற்பாடு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ADVERTISEMENT
