• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 20, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

சவூதி அரேபியா மற்றும் அதன் சுற்றுச்சூழல் ; நிலைத்த எதிர்காலத்திற்கான உறுதியான அர்ப்பணிப்பு..!

Thamil by Thamil
June 4, 2025
in உலக செய்திகள்
0 0
0
சவூதி அரேபியா மற்றும் அதன் சுற்றுச்சூழல் ; நிலைத்த எதிர்காலத்திற்கான உறுதியான அர்ப்பணிப்பு..!
Share on FacebookShare on Twitter

ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இது நமது புவியின் யதார்த்தத்தைப் பற்றி சிந்திக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையைப் பாதிக்கும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு உலகளாவிய சந்தர்ப்பமாகும்.

இந்த சந்தர்ப்பத்தில், சுற்றுச்சூழல் நீதியின் கொள்கைகள் மற்றும் சவூதி விஷன் 2030 இன் இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு லட்சிய தேசிய தொலைநோக்கு கட்டமைப்பிற்குள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், நிலையான வளர்ச்சியை அடைவதற்கும் சவூதி அரேபியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சார்ந்த தீவிர சவால்களையும், அவற்றை தீர்க்க வேண்டும் என்பதற்கான அவசியத்தையும் கண்டறிந்து, தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச நிலைகளில் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் இந்தப் பிரச்சனைகளுக்கு முடிவு காண, சவூதி அரேபியா, சுற்றுச்சூழல் பாதுகாப்பை முழுமையான அபிவிருத்தி மாற்றத்தின் மையமாகக் கொண்டு, இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கும், காலநிலை மாற்றம் மற்றும் வறண்ட நிலமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கும், மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயற்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த சூழ்நிலையில், “சவூதி பசுமை முனைவு” ஒரு முன்னேற்றமான மாதிரியை வெளிப்படுத்துகிறது. இது, நாட்டிற்குள் பத்து பில்லியன் மரங்களை நட்டல், பசுமை பரப்புகளை அதிகரித்தல், மற்றும் வருடத்திற்கு 2030 ஆம் ஆண்டுக்குள் 278 மில்லியன் டன் கார்பன் வாயு வெளியீட்டை குறைத்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. இந்த முயற்சி, “மத்திய கிழக்கு பசுமை முனைவு” உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில், 30க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து, மத்திய கிழக்கு பகுதி முழுவதிலும் 50 பில்லியன் மரங்களை நட்டலைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் பரப்பு மற்றும் தாக்கம் ஆகியவற்றின் அடுப்படையில் உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் முயற்சிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இந்த முயற்சிகள், சுற்றுச்சுழற்சி கார்பன் பொருளாதார அணுகுமுறையின் கீழ், 2060 ஆம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழலுக்கு ஊடுருவும் கார்பன் வெளியீடுகளை பூச்சியத்துக்கு கொண்டுவர வேண்டும் என்ற சவூதி அரபிய அரசின் நோக்கத்துடன் முழுமையாக ஒத்துப்போகக் கூடியதாக அமைகின்றன. இந்த அணுகுமுறை, 2020 ஆம் ஆண்டு சவூதி அரபியா G20 யின் தலைமை பொறுப்பேற்ற போது அந்நாட்டின் வழிகாட்டுதலின்படி ஆதரிக்கப்பட்டது. இதில், கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் (mitigation), மீள் பயன்படுத்தும் (reuse), மீள்சுழற்சி செய்யும் (recycling), மற்றும் அகற்றும் (removal) தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இந்தச் சூழலில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் சகாகா சூரிய ஒளி மின்சக்தி திட்டம் (Sakaka Solar Energy Project), துமத் அல்-ஜண்டல் காற்றழுத்த மின்சக்தி திட்டம் (Dumat Al-Jandal Wind Energy Project), மற்றும் எதிர்கால சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரத் திட்டங்களான NEOM மற்றும் The Line போன்றவற்றைத் தொடங்குவது போன்ற பல மூலோபாயத் திட்டங்களை இராச்சியம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இவை சுத்தமான எரிசக்தி மற்றும் ஸ்மார்ட் இயக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நிலையான நகரங்களுக்கான உலகளாவிய மாதிரியைப் பிரதிபலிக்கின்றன.

மேலும், சுற்றுச்சூழல் முறைமைகளை மேம்படுத்தும் தேசிய யோசனை (National Environmental Strategy) க்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக, உயிரினங்கள் வாழும் பருவ அமைப்புகளை பாதுகாப்பது, காற்றின் தரத்தை மேம்படுத்துவது, குப்பை மேலாண்மை திறனை உயர்த்துவது, மற்றும் சுற்றுச்சூழல்காக்கப்பட்ட பகுதிகளின் விகிதத்தை அரசின் மொத்த பரப்பளவில் 30%ஐக் கடந்த அளவிற்கு உயர்த்துவது அடங்குகின்றன. ரியாத் போன்ற முக்கிய நகரங்களில், நகராட்சி குப்பை மறுசுழற்சி விகிதம் 35% ஐ விட உயர்ந்துள்ளது. மேலும், 2021ஆம் ஆண்டிலிருந்து, சுமார் 2,00,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் புனரமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சவூதி அரபியாவின் முயற்சிகள் தேசிய மட்டத்தில் மட்டும் இல்லாமல், சர்வதேச அளவில் மற்றும் நட்பு நாடுகளுக்கும், குறிப்பாக ஆபிரிக்க மற்றும் ஆசிய பகுதிகளில் இருக்கும் நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளன. இம்முயற்சிகள் வழியாக: வறண்ட நிலமாக்கலை எதிர்க்கும் திட்டங்களுக்கு நிதி உதவி, தண்ணீர் மேலாண்மை திறன்களை மேம்படுத்தும் பயிற்சி மற்றும் வசதிகள் உருவாக்கல், சுற்றுச்சூழல் சார் கண்டுபிடிப்புகளுக்கான தொழில்நுட்ப உதவித்தொகைகள் வழங்கல் மற்றும் பசுமை காலநிலை நிதியத்தின் (Green Climate Fund) மற்றும் உலக சுற்றுச்சூழல் வசதியின் (Global Environment Facility) வாயிலாக காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யும் திட்டங்களுக்கு ஆதரவு வழங்கல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சவூதி அரபியா பல்வேறு சுற்றுச் சூழல் பாதுகாப்பு சார் சர்வதேச ஒப்பந்தங்களில் மிக ஆர்வமாக பங்கேற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது அவற்ளுள் முக்கியமாக, ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மேலமைப்பு உடன்படிக்கை, பாரிஸ் காலநிலை ஒப்பந்தம், உயிரியல் பல்வகைமைக்கான ஒப்பந்தம், மற்றும் ஓசோன் படலத்திற்கு சேதம் விளைவிக்கும் பொருட்கள் தொடர்பான மான்ட்ரியால் நெறிமுறை (Montreal Protocol) ஆகியவையை குறப்பிடலாம். குறிப்பாக இந்த நெறிமுறையின் கீழ், சவூதி அரபியா ஓசோன் அடுக்கை சேதப்படுத்தும் அனைத்து வகை பொருட்களையும் 100% அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது, சர்வதேச தரநிலைகள் மற்றும் சிறந்த சுற்றுச்சூழல் நடைமுறைகளைப் பின்பற்றுவதில் சவூதி அரசின் உறுதியான அர்ப்பணத்தை வெளிப்படுத்துகிறது.

பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் நீரோடு தொடர்பான சவால்களை நிவர்த்தி செய்வதற்கான அதன் வளர்ந்து வரும் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகவும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் நிலைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் இராச்சியத்தின் தொலைநோக்கு 2030 க்கு இணங்கவும், ரியாத்தை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய நீர் அமைப்பைத் தொடங்குவதில் சவூதி அரேபியா இராச்சியம் முன்னணி மற்றும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

G20 உறுப்பினராக தனது வழிகாட்டும் பங்கை மற்றும் பொறுப்பை அடிப்படையாகக் கொண்டு, சவூதி அரபியா பசுமை பொருளாதாரத்தை கட்டியமைக்கும் முயற்சிகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்த பசுமை பொருளாதாரம், புதுமை, தொழில்நுட்பம், மற்றும் அறிவுத் திறன் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். மேலும், சவூதி அரபியா தூய்மையான ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பயனுள்ள கூட்டு முயற்சிகளை (effective partnerships) உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

சவூதியின் பொது முதலீட்டு நிதி (PIF) மற்றும் தேசிய வளர்ச்சி நிதி (NDF), சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்களை ஆதரிக்க சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், புதிய முதலீட்டுத் திட்ட வாய்ப்புகளை உருவாக்குவதிலும், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிலைகளில் நிலைத்த வருவாய்களை (sustainable returns) அடைவதிலும் பெரும் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.

சவூதி அரபியாவில் இதுவரை சுற்றுச்சூழல் துறையில் அடைந்துள்ள சாதனைகள், நீண்ட கால உறுதியான மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியின் தொடக்கமாகும். இது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒரு விருப்பத் தெரிவு அல்ல மாறாக ஒரு அவசியமான இருப்புப் பிரச்சினை (existential necessity) என உறுதி கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அரச தலைமையின் வழிகாட்டலின் கீழ் இயக்கப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, சவூதி அரேபியா புவியைப் பாதுகாப்பதற்கும் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் நிலையான எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் சர்வதேச ஒற்றுமை, நிபுணத்துவ பரிமாற்றம் மற்றும் கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை இராச்சியம் வலியுறுத்துகிறது.

Related Posts

வலுக்கும் இஸ்ரேல்-ஈரான் மோதல்; 7வது நாளாகவும் தொடர்கிறது

வலுக்கும் இஸ்ரேல்-ஈரான் மோதல்; 7வது நாளாகவும் தொடர்கிறது

by Sangeetha
June 19, 2025
0

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் மோதல் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் வெள்ளிக்கிழமை கூட தீர்மானித்துள்ளது. நேற்று புதன்கிழமை வெள்ளை மாளிகைக்கு...

சோதனையின் போது வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

சோதனையின் போது வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

by Sangeetha
June 19, 2025
0

எலான் மஸ்க் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி ஆய்வு, சுற்றுலா உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது....

இஸ்ரேலின் மருத்துவமனையொன்றை தாக்கிய ஈரான்

இஸ்ரேலின் மருத்துவமனையொன்றை தாக்கிய ஈரான்

by Sangeetha
June 19, 2025
0

இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள மருத்துவமனையொன்றை ஈரான் தாக்கியுள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள பீர்செபாவில் சொரோகா மருத்துவமனை மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது என இஸ்ரேலின்...

ஈரானில் இருந்து டெல்லி திரும்பிய இந்திய மாணவர்கள்

ஈரானில் இருந்து டெல்லி திரும்பிய இந்திய மாணவர்கள்

by Sangeetha
June 19, 2025
0

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரம் அடைந்து வருகிறது. ஈரானில் 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இதில் பாதி பேர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள்....

உக்ரைன் தாக்குதலுக்கு ரஷியா தக்க பதிலடி கொடுக்கும் – டிரம்ப்

ஈரான் மீது தாக்குதல் நடத்த தனிப்பட்ட முறையில் அமெரிக்க அதிபர் ஒப்புதலா?

by Sangeetha
June 19, 2025
0

கடந்த 13-ம் திகதி இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தி மையங்களையும், ராணுவ நிலைகளையும் குறிவைத்து...

ஈரானுடன் கைகோர்க்கும் வடகொரியா ; பரபரப்பில் உலகம்..!

ஈரானுடன் கைகோர்க்கும் வடகொரியா ; பரபரப்பில் உலகம்..!

by Thamil
June 18, 2025
0

"ஈரான் தனியாக இல்லை வடகொரியா முழுமையான ஆதரவுடன் உள்ளது" என பழிவாங்கும் பாணியில், வடகொரிய தலைவர் தனது கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும், "இந்தப் போரில் ஈரான்...

தொலைபேசிகளிலிருந்து ‘வட்ஸ் அப்’ செயலியை நீக்குமாறு ஈரானிய அரசாங்கம் வலியுறுத்து

தொலைபேசிகளிலிருந்து ‘வட்ஸ் அப்’ செயலியை நீக்குமாறு ஈரானிய அரசாங்கம் வலியுறுத்து

by Sangeetha
June 18, 2025
0

இஸ்ரேலுடன் மோதல் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ள நிலையில் ஈரானிய மக்களது தொலைபேசிகளிலிருந்து வட்ஸ் அப் செயலியை நீக்குமாறு ஈரானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. ஈரானில் இருந்து பகிரப்படும் தகவல்கள்...

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறியது..! பல விமான சேவைகள் இரத்து

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறியது..! பல விமான சேவைகள் இரத்து

by Sangeetha
June 18, 2025
0

இந்தோனேசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமான பாலி தீவுக்குக் கிழக்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. பாலி தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள...

சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு

சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு

by Sangeetha
June 18, 2025
0

இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ,அமெரிக்க விண்வெளி கழகமான நாசா ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி