திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம் ஹேமந்த குமார அவர்கள் மூதூர் பிரதேச செயலகத்திற்கு நேற்று (03) உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டார்.
மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் அவர்களினால் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் வரவேற்கப்பட்டார்.
மாவட்ட அரசாங்க அதிபரினால் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு எதிர்கால வினைத்திறனான செயற்பாடுகளை எவ்வாறு இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற முறையில் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக தெளிவுபடுத்தினார்.
மேலும் மாவட்ட செயலகத்திலிருந்து வருகை தந்திருந்த உத்தியோகத்தர்களினால் அரச நிதி ஒதுக்கீட்டின் கீழ் மூதூர் பிரதேச செயலக பிரிவில் மீள்குடியேறிய மக்களுக்கு நிர்மாணிப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா ஒரு மில்லியன் மற்றும் 0.6 மில்லியன் பெறுமதியான வீடமைப்பு திட்டம் தொடர்பில் பரிசீலனை செய்யும் முகமாக வீட்டுத்திட்ட பயனாளிகளை நேரடியாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், மாவட்ட செயலக மற்றும் மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.



