சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இடம்பெற்று வரும் சுற்றாடல் வாரத்தில் இன்றைய நாள் நிகழ்வாக கரையோர பகுதிகளில் காணப்படும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் சிரமதான நிகழ்வு இன்று (04) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பைசல் நகர், அண்ணல் நகர், மாஞ்சோலை சேனை, ரஹ்மானிய நகர் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கிண்ணியா சுகாதார வைத்தியப் பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். அஜித், கிண்ணியா நகர சபையின் செயலாளர் எம். அனிஷ், கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஏ. முஹம்மது இம்ரான், கடற்படையினர், பாதுகாப்பு படையினர், கிண்ணியா நகர சபை உத்தியோகத்தர்கள் , கிண்ணியா சுகாதார பணிமனை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\



