முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் (03) காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட தற்காலிக பேருந்து நிலையத்தினை சூழவுள்ள பகுதிகளில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்த சிரமதானப் பணியானது மாவட்ட உளநல ஒருங்கிணைப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் சி. விதுரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த சிரமதானப்பணியில் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், பிராந்திய பல் வைத்திய நிபுணர், கணக்காளர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், சாரதிகள் முதலானோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT



