கொழும்பு – பிலியந்தலை வீதியில், போகுந்தர பகுதியில் அமைந்துள்ள மரக்கடை ஒன்றில் இன்று (04) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்காக தெஹிவளை கல்கிஸ்ஸ நகர சபையின் தீயணைப்புத் துறையினர் நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்துள்ளனர். மேலும், தீயை முழுமையாக அணைப்பதற்காக கொழும்பு தீயணைப்புத் துறையின் உதவியையும் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெஹிவளை கல்கிஸ்ஸ தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
ADVERTISEMENT