கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலையில் அமைந்துள்ள திஸ்ஸ மகா வித்தியாலயத்தில் இன்று (03) மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது.
குறித்த நிகழ்ச்சித்திட்டமானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி முகாமையாளர் தி.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க, திஸ்ஸ மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் நிசாந்த அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
“பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிழ்வில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.



