தேசிய வரி வாரத்தினை முன்னிட்டு திருகோணமலையில் இன்று (03) “வரி சக்தி” எனும் தலைப்பிலான விழிப்புணர்வொன்று திருகோணமலை குளக்கோட்டன் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தம்புள்ள பிராந்திய காரியாலயம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் வரி செலுத்துவதன் முக்கியத்துவம், வரி செலுத்தத் தவறுவது தண்டணைக்குரிய குற்றமாகும் என பல விடயங்கள் தெளிவூட்டப்பட்டன.
ADVERTISEMENT
இதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தம்புள்ள பிராந்திய காரியாலய ஆணையாளர் பி.ஜி.லலித் உட்பட வர்த்தகர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.






