மட்டக்களப்பு முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பராஜசிங்கம் கொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட இருந்த நிலையில் மகிந்த குடும்ப ஏவல் நாய் மற்றும் ஒட்டுக்குழு தலைவனான பிள்ளையான் உட்பட ஐவரும் குற்றமற்றவர்கள் என 2020 ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.
மக்கள் மத்தியில் மகிந்த குடும்பத்திற்கு இருந்த செல்வாக்கு சரிவை சந்தித்துக் கொண்டிருந்தவேளை மீண்டும் அவர்களை அரசாட்சிக்கு கொண்டுவர “ சிறைக்கூடத்தில் இருந்து கொண்டே “ 269 க்கும் மேற்கட்ட அப்பாவி மக்களை கொலை செய்ய சஹரான் குழுவிற்கு அனுசரணை வழங்கி மக்கள் மத்தியில் மகிந்த குடும்பத்தின் தேவையை உணரச் செய்து கோத்தபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்க துணிந்து செயற்பட்ட பிள்ளையானிற்கு நன்றிகடன் செலுத்தும் முகமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அழுத்தத்தின் பெயரில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திரு சூசைதாசன் அவர்களால் வழக்கை மேற்கொண்டு செல்ல கூடிய போதிய ஆதாரங்கள் இல்லாமையினால் விடுதலை செய்யப்பட்டதாக அந்த நாட்களிலும் இன்றும் அவரது ஒட்டுகுழு மற்றும் சில அடிவருடிகளாலும் பேசப்பட்டு வருகின்றது.
இன்று மக்களின் மிகப் பெரும் ஆதரவுடன் ஆட்சியில் உள்ள அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசு அரசியல்வாதிகளின் அழுத்தத்தின் பெயரில் வழங்கப்பட்டதாக அறியப்படும் தவறான நீதிமன்ற தீர்ப்புகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கப்படவேண்டும் என்ற உறுதியான கொள்கையின் அடிப்படையில் பல தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகள் மீள் விசாரணைக்கு எடுத்துகொள்ள சட்டமாஅதிபர் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
அந்த வழக்கில் கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவின் இலஞ்சம் பெற்ற வழக்கு மற்றும் பிள்ளையானினால் மேற்கொள்ளபட்டதாக அறியப்பட்ட ஜோசப்பரராஜசிங்கத்தின் வழக்கு என்பன மீள் விசாரணைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் சம்மந்தப்பட்ட திணைக்களங்களிற்கு அனுமதி வழங்கியுள்ளது.