வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது.
கடந்த இரு வருடங்களாக இளைஞர் கழகங்கள் அமைக்கப்படாத நிலையில் வவுனியா மூன்று முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வவுனியா மாவட்டத்தில் முதலாவது இளைஞர் கழக அங்குரார்ப்பணம் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவின் பங்குபற்றலில் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர் கலந்து கொண்டிருந்ததுடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளர் காமினி, உதவிப் பணிப்பாளர் ரவீந்திர ரூபசிங்க, மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி சிவானி மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



