“வவுனியா – கூமாங்குளம், நூலக வீதி 12 மில்லியன் ரூபாய் நிதியில் திருத்த பணிகள் ஆரம்பித்துள்ளதாக” தேசிய மக்கள் சக்தியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திருத்தப் பணிகளை இன்று ஆரம்பித்து வைத்த பின் இது தாெடர்பில் கருத்து தெரிவித்த பாேதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “வவுனியா – கூமாங்குளம் நூலக வீதி முழுமையாக தார் இடப்படவுள்ளது. 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த வேலைத்திட்டம் வைபக ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்மூலம் கூமாங்குளம் நூலக வீதி காெங்கிறீட் வீதியுடன் இணைக்கப்படவுள்ளது.
பல வருடங்களாக இந்த வீதி திருத்தப்படாமல் இருந்தமையால் மக்கள் சிரமத்தை எதிர் நாேக்கி இருந்தார்கள். இதனை தார் வீதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் மக்களிடம் இந்த வீதி கையளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.


