“தேசிய மக்கள் சக்தி சார்பாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளரின் சகோதரர் விகிதாசார ஆசனத்தை சகோதரிக்கு தரும்படி கேட்டிருந்தார்.
கட்சியின் கொள்கைக்கு அமைய குறித்த ஆசனம் அவருக்கு வழங்கப்படாமையினால் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஒரு நபர் ஈடுபட்டதாக” தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் தெரிவித்தார்.
இன்றைய தினம் கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், “சகோதரிக்கு ஆசனம் கேட்டு கிடைக்காத நிலையில் தேசிய மக்கள் சக்தி ஊழல் என்ற பொய்யான கருத்துக்களை மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
ஆர்ப்பாட்டம் செய்வது அவரின் ஜனநாயக உரிமை. அதற்காக பொய்யான தகவல்களை முன்வைக்க முடியாது. அவருடைய சகோதரிக்கு ஆசனம் அவரால் கேட்கப்பட்டது.
கட்சியின் கொள்கைக்கு அமைய ஆசனம் வழங்க முடியவில்லை. இதற்காக அவர் நீதிமன்றத்தை நாடமுடியும்” என தெரிவித்தார்