மத்திய மலைநாட்டில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வந்த கடும் காற்றுடன் கூடிய கனமழையினால் நானு ஓயாவில் சமர்செட் லெங்டெல் தோட்டத்தில் 28 குடும்பங்களை சேர்ந்த குடியிருப்பு பகுதியின் பின்புறத்தில் இருந்து பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததில் 120 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக இடம் பெயர்ந்து கார்லபேக் தமிழ் வித்யாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டாமெனவும் மண்சரிவு ஏற்பட்ட இடத்தினை பரிசோதித்த பின்னர் முறையா அறிக்கை வௌிவந்த பின்னர் வீடுகளுக்கு சொல்ல முடியுமென அனர்த்த முகாமைத்துவ பரிசோதகர்கள் மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை வரும் புதன்கிழமை வரை பாடசாலையில் தங்கும் படி அனர்த்த முகாமைத்துவ பரிசோதக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய மாகாண கல்வி அமைச்சு மற்றும் நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளரின் முறையான அனுமதியுடன் பாடசாலை நடைபெறவில்லையெனவும் இதனால் பாடசாலைக்கு மாணவர்கள் வருகைத் தரவில்லை எனவும் பாடசாலை அதிபர் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.