1805
நெப்போலியப் போர்கள்: பிரெஞ்சு-எசுப்பானியக் கடற்படையினர் பிரித்தானியரிடம் இருந்து பிரான்சுக் கோட்டைக்குச் செல்லும் வழியில் டயமண்ட் குன்று என்ற ஆளில்லாத் தீவைக் கைப்பற்றினர்.
1835
பி. டி. பர்னம் ஐக்கிய அமெரிக்காவிற்கான தனது முதலாவது வட்டரங்கு சுற்றை ஆரம்பித்தார்.
1896
மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த கம்பியில்லாத் தந்திக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1919
அமெரிக்காவின் எட்டு மாநிலங்களில் அரசுக் கிளர்ச்சியாளர்கள் குண்டுகளை வீசினர்.
1924
ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த அனைத்துப் பழங்குடிகளுக்கும் அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்டமூலத்தை அரசுத்தலைவர் கால்வின் கூலிஜ் அறிமுகப்படுத்தினார்.
1941
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியப் படையினர் கொண்டொமாரி கிராமத்தில் கிரேக்கக் குடிமக்களைக் கொன்றனர்.
1946
இத்தாலியில் முடியாட்சியைக் குடியரசாக மாற்றும் முடிவுக்கு மக்கள் பெருமளவு ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலியின் மூன்றாம் உம்பெர்த்தோ மன்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.
1953
இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியத்தின் மகாராணியாக முடிசூடினார். தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட முதலாவது பெரிய பன்னாட்டு சர்வதேச நிகழ்வு இதுவாகும்.
1955
சோவியத் ஒன்றியமும் யுகோசுலாவியாவும் பெல்கிறேட் உடன்பாட்டின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே 1948 இல் அறுந்து போன உறவைப் புதுப்பித்தன.
1962
சிலி, இத்தாலி அணிகளுக்கு இடையே நடந்த 1962 உலகக்கோப்பை காற்பந்துப் போட்டி ஒன்றில் விளையாட்டு வீரர்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்புகளை அடக்கக் காவல்துறையினர் பல முறை அழைக்கப்பட்டனர்.
1964
பலத்தீன விடுதலை இயக்கம் அமைக்கப்படட்து.
1965
வியட்நாம் போர்: முதலாவது தொகுதி ஆத்திரேலியப் படைகள் தென் வியட்நாமை அடைந்தது.
1966
நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.
1967
மேற்கு ஜேர்மனியில் ஈரானின் அரசுத்தலைவரின் வருகைக்கு எதிராக வன்முறை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1979
திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் போலந்துக்குப் பயணம் மேற்கொண்டார். பொதுவுடைமை நாடொன்றிற்குச் சென்ற முதலாவது திருத்தந்தை இவராவார்.
1983
டெக்சசில் இருந்து மொண்ட்ரியால் நோக்கிச் சென்ற எயார் கனடா வானூர்தி விபத்துக்குள்ள்ளானதில் 23 பயணிகள் உயிரிழந்தனர்.
1999
பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
2003
வேறொரு கோளுக்கான (செவ்வாய்) மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற தனது முதலாவது விண்கலத்தை ஐரோப்பிய ஆய்வு மையம் ஈசா கசக்ஸ்தானில் பைக்கனூரில் இருந்து ஏவியது.
2012
முன்னாள் எகிப்திய அரசுத்தலைவர் ஓசுனி முபாரக் 2011 எகிப்தியப் புரட்சியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவி விட்ட குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
2014
தெலுங்கானா அதிகாரபூர்வமாக இந்தியாவின் 29ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.



