ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இந்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ள போதிலும், அவரின் இலங்கை விஜயத்துக்கான திகதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.
சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை கரிசனைகளை எவ்வாறு கையாள்வது எனத் தெரியாமல் அநுர அரசு தடுமாறிக்கொண்டிருக்கின்ற ஒரு நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த வருடம் ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர், ஐ.நா. அமைப்புக்கு மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அளித்த அறிக்கையில், “புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மோதலுக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்வதற்கும், பொறுப்புக்கூறல் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கும், நல்லிணக்கத்தை நோக்கிச் செயற்படுவதற்கும், அடிப்படை அரசமைப்பு மற்றும் நிறுவன சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் உறுதியளிக்க வேண்டும்.” – என்று குறிப்பிட்டிருந்தார்.