• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

சந்திக்க வரச் சொல்லிவிட்டு தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்ற கடற்தொழில் அமைச்சர்.!

Mathavi by Mathavi
June 1, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
சந்திக்க வரச் சொல்லிவிட்டு தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்ற கடற்தொழில் அமைச்சர்.!
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சிந்தனைக்கு எதிர் மறையாக தேசிய மக்கள் சக்தி வடபகுதியில் இயங்குவதாக இயக்கச்சி இராவணன் வன உரிமையாளரும், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளருமாகிய பொன்.சுதன் தெரிவித்துள்ளார்

இன்று (1) சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தேசிய மக்கள் சக்தியின் உயர்ந்த கொள்கையானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உயரிய சிந்தனைக்குள்ளாள் உதயமானது.

ஆனால் குறிப்பாக வடபகுதியில் தேசிய மக்கள் சக்தி நடந்து கொள்ளும் விதமானது நேர் எதிராக காணப்படுகின்றது. ஜனநாயகம் என்பது ஒரு சிறிதளவும் இருப்பதாக இல்லை.

மக்களுடைய ஆணைக்கு எதிராக, ஜனநாயக விரோதமாக நடந்து கொள்ளும் போது இதனை நாங்கள் தட்டிக் கேட்க முனைந்தால் தேசிய மக்கள் சக்தியில் ஒரு தலைமைத்துவத்துடன் எமது பிரச்சினையை கரிசனையோடு கேட்பதற்கு ஒரு பண்புள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் இங்கில்லை.

ஜனாதிபதியின் கொள்கையை ஏற்று, அவரது கருத்துக்களை நம்பித்தான் நாம் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணி புரிந்தோம். ஆனால் தேசிய மக்கள் சக்தியும் ஏனைய கட்சிகளை போன்றுதான் செயற்படுவதை காணக் கூடியதாக உள்ளது.

இது தொடர்பாக நான் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் பலருடன், அமைச்சர் சந்திரசேகரனுடன் கலந்துரையாடினேன். நேற்று முன்தினம் பிற்பகல் 02.00 அமைச்சர் தன்னை சந்திப்பதற்கான அனுமதியை எனக்கு வழங்கியிருந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்திற்கு வாருங்கள், அங்கு நாம் மேற்கொண்டு கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

பிற்பகல் 02.00 மணிக்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்திற்கு சென்ற நான் மாலை 06.00 கடந்தும் அமைச்சரை சந்திப்பதற்காக அங்கேயே காத்திருந்தேன்.

02.00 மணிக்கு வருமாறு கூறிய அமைச்சர் அலுவலகத்தில் இல்லாததால் அவரது உதவியாளர்களிடம் பல முறை தெரிவித்தும் சந்திப்பதற்கு தான் வருவதாக கடசிவரை அவர் கூறவில்லை. பின்பு அவர் இன்னொரு கலந்துரையாடலுக்கு சென்றுவிட்டதாக அழைப்பு வந்தது.

ஆனால் அமைச்சர் எங்கு சென்றார் என்பதனை தேடி அறிந்த போது யாழ் தியேட்டர் ஒன்றில் அந்த நேரத்தில் அமைச்சர் படம் பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வாறு என்றால் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். கட்சிக்காக உங்களுக்காக உழைத்த ஒருவரை சந்திக்க அழைத்து விட்டு நீங்கள் படம் பார்க்க சென்றிருக்கிறீர்கள் என்றால் ஜனாதிபதியின் கருத்தியலுக்கு ஏற்ப மக்களுக்கு எவ்வாறு நீங்கள் சேவை செய்ய போகின்றீர்கள்.

கட்சிக்காக அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய எம்மையே அரவணைக்க தெரியாத நீங்கள் இந்த மக்களை எப்படி அரவணைக்க போகின்றீர்கள்? எல்லோரையும் அரவணைத்து அன்பாக இனவாதம் இன்றி வழி நடத்துமாறு கெளரவ ஜனாதிபதி அறிவுறுத்திய போதும் நேற்று முன்தினம் கட்சி அலுவலகத்திற்கு என்னை அழைத்து அமைச்சர் நடத்திய விதம் ஒரு வெறுப்பான உணர்வை தந்துள்ளது.

02.00 மணிக்கு அலுவலகம் சென்று 06.00 மணிக்கு பின்பு வீடு திரும்பும் வரை தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களால் தண்ணீர் கூட தரப்படவில்லை.

தமிழ், சிங்கள மக்களுக்கு இருக்கக் கூடிய மனித நேயம் தேசிய மக்கள் சக்திக்கு காணப்படவில்லை. ஆகவேதான் அலுவலகத்தில் பல மணி நேரம் இருந்த எனக்கு சொட்டு தண்ணீர் கூட தரவில்லை. கட்சிக்காக வேலை செய்த எங்களுக்கே இந்த நிலை என்றால் எதிர்காலத்தில் மக்களின் கதி கேள்விக் குறிதான்.

ஜனாதிபதியின் எண்ணங்களுக்கு எதிராக மக்களின் ஆணைகளுக்கு எதிராக அநுரகுமார திசாநாயக்கவிற்கு துரோகம் செய்யும் வேலைகளில் வட பகுதி தேசிய மக்கள் சக்தியினர் செயல்படுகின்றனர். இது ஒரு போதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது.

ஜனாதிபதி நினைக்கலாம் தேசிய மக்கள் சக்தியை வட பகுதியில் இவர்கள் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று. தேசிய மக்கள் சக்தியை அழிப்பதற்கு வெளியில் இருந்து யாரும் வரத் தேவையில்லை உள்ளுக்குள் இருந்து சிதைப்பதற்கே இங்கு நிறைய பேர் இருக்கின்றனர்.

இந்த நிலை தொடருமாக இருந்தால் மிக விரைவில் தேசிய மக்கள் சக்தி வட பகுதியில் ஆட்டம் காணும் என்பதே என்னுடைய உறுதியான கருத்து.

இதனை சரி செய்ய வேண்டும் என்றால் உடனடியாக ஜனாதிபதி தலையிட்டு ஊழல் கரங்களுடன் தேசிய மக்கள் சக்தியில் இருப்பவர்களை வெளியேற்றி நம்பி வாக்களித்த மக்களுக்கும், தேசிய மக்கள் சக்தியுடன் பயணித்தவர்களுக்கும் நீதியை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி