வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த கடத்தல் கும்பல்களுக்கு இடையே அவ்வப்போது பயங்கர மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.
இதனிடையே, அந்நாட்டின் தம்லிபாஸ் மாகாணத்தை சேர்ந்த இசைக்கலைஞர்கள் 5 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க ம் ரெனொசா நகருக்கு சென்றுள்ளனர்.
அப்போது, அந்த இசைக்கலைஞர்கள் 5 பேரையும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடத்திச்சென்றது. இந்த சம்பவம் குறித்து கடத்தப்பட்ட இசைக்கலைஞர்களின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குப்பின் கடத்தப்பட்ட இசைக்கலைஞர்கள் 5 பேரையும் கடந்த வியாழக்கிழமை சடலமாக கண்டுபிடித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் கும்பல் இசைக்கலைஞர்கள் 5 பேரையும் கடத்தி அவர்களை கொன்று உடலை வனப்பகுதியில் வீசிச்சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை புகழ்ந்து இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும், இது கடத்தல் கும்பல்களுக்கு இடையேயான மோதலை தூண்டி இதுபோன்ற கொலை சம்பவங்களை நடைபெறுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.