முல்லைத்தீவு, குருந்தூர் மலையைச் சேர்ந்த இரண்டு தமிழ் விவசாயிகள் ஜூன் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, புத்த துறவி கல்கமுவ சாந்தபோதி தேரர் தொல்பொருள் திணைக்களத்துக்கு அளித்த புகாரைத் தொடர்ந்து, மே 10 ஆம் தேதி அவர்கள் தங்கள் சொந்த விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.
முதலில் மே 15 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர், பின்னர் மே 29 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது, இப்போது மீண்டும் ஜூன் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வேண்டுமானால் விவசாயிகள் தாங்கள் செய்தது பிழை தொல்லியல் இடத்தை சேதம் செய்தோம் என்று குற்றத்தை ஒப்புக்கொண்டு பிணையில் வெளியே வரமுடியும். இருந்தாலும் அந்த விவசாயிகள் இல்லை நாங்கள் எங்களுக்கு உரிய நிலத்தில்தான் விவசாயம் செய்தோம் என்று நிலம் மீதுள்ள தமது உரித்துக்காக தொடர்ந்தும் இந்த பேரினவாத திணைக்களங்களோடு சட்டரீதியாக போராடுவதால் மீண்டும் மீண்டும் சிறை வைக்கப்படுகிறார்கள்.