மன்னார்- பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் காணாமல் போன முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (27) இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் ஒரு முன்னாள் போராளி இவரது மகன் ஒரு முன்னாள் போராளி தற்போது மகனும் உயிருடன் இல்லை.
சம்பவத்தில் மன்னார் பிரதேசம் -மடு கிராமத்தை சேர்ந்த எல்லப்பன் ராதாகிருஸ்னன் (வயது 59) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த முதியோர் கடந்த 26ம் திகதி வயலுக்கு சென்ற நிலையில் காணவில்லை என உறவினர்கள் தேடிய போது வயலுக்குச் செல்லுகின்ற வீதியில் முதியவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


