வடக்கு மாகாண காணி தொடர்பான வர்த்தமானியை மீளபெற்றமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், அமைச்சரவைக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
“காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் பிரசுரித்த வர்த்தமானியை மீள்கைவாங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. நாம் விதித்த காலக்கெடுவுக்கு முன் இந்தத் தீர்மானம் எடுக்கப்படுள்ளது. இது உடனடியாக இன்றிரவே வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகப் பதிவில் இதனைத் தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதிக்கு இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சி எழுதிய கடிதத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.