இலங்கையில் 2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மே மாதம் 25 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் வீதி விபத்துக்களால் 1062 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் கூறுகையில்,
“இந்தக் காலப் பகுதியில் நாட்டில் 1003 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
ADVERTISEMENT
இந்த வீதி விபத்துக்களினால் சுமார் 7 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்துக்குள் வீதி விபத்துக்களால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.” – என்றார்.