சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை 10.00 மணி முதல் நாளை புதன்கிழமை (28) காலை 10.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு,
காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, கங்கை இஹல கோரள, கண்டி மாவட்டத்தில் பஸ்பகே கோரள, கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய, யட்டியந்தோட்டை மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.