அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5 வது ஆண்டு நினைவு நாள் கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இன்று (26) அனுஷ்டிக்கப்பட்டது.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொட்டகலை சி.எல்.எப் வளாக ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இப்பூஜை வழிபாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஐயாவின் பாரியார் ராஜலஷ்சுமி தொண்டமான், தவிசாளரும், நிதிச்செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் உட்பட இ.தொ.கா உயர்பீட உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT

