ஆனையிரவு உப்பளத்தில் கடந்த 14.05.2025 ஆம் திகதியிலிருந்து தமது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் தமக்கு கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்கள் அனைத்தும் கிடைக்கப் பெறவில்லை எனவும் தம்மை ஒரு அடிமைகள் போல் நடாத்தப்பட்டு வருவதன் காரணமாகவும் தமக்கு உப்பளத்தில் தொடர்ச்சியாக வேலை வழங்கப்படுவதில்லை எனவும் உப்பளத்தின் முகாமையாளருக்கு சார்பாக இருப்பவர்களுக்கு மாதம் முழுவதும் வேலை வழங்கப்படுவதாகவும் இதன் காரணமாக தமக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் அத்துடன் வாழ்வாதாரத்தையும் மிகவும் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து இன்று 26.05.2025 வரை எந்த வித வேலையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உதிய தீர்வை வழங்குவார்கள் உரிய தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எம்முடன் கலந்துரையாடி எமக்கான உதிய தீர்வினை பெற்று தந்து எம்மை வழமை போன்று பணியில் ஈடுபடுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.