மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
காசல்ரி,மவுசாக்கலை, மேல் கொத்மலை, கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமல் சுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வரும் நிலையில் உள்ளது.
மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 48 அடி குறைந்த நிலையில் இருந்த போதிலும் தற்போது மழை பெய்தது வருவதால் 5 அடி உயர்ந்து உள்ளது.
தொடர்ந்து இவ்வாறு மழை பெய்யும் பட்சத்தில் வெகு விரைவில் நீர் மட்டம் உயரும்.
பெருந் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர், நாளாந்தம் கூலி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர். மேலும் பாடசாலை மாணவர்கள் வருகை மிகவும் குறைந்த நிலையில் உள்ளது.