மட்டக்களப்பு பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் கழக தினம் நேற்று மாலை சிறப்பான முறையில் நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவில் நீண்ட வரலாற்று பின்னணியைக் கொண்ட பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழகம் பல்வேறு சமூக செயற்பாடுகளையும் விளையாட்டு செயற்பாடுகளையும் முன்னெடுத்துவருகின்றது.
இந்த கழகத்தின் 60 ஆவது வருடத்தினை சிறப்பிக்கும் வகையிலும் சாதனையார்கள் மற்றும் கழக சாதனையாளர்கள் மற்றும் சிரேஸ்ட உறுப்பினர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கோல்டன் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் கு.தீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோல்டன் விளையாட்டுக்கழகத்தின் சிரேஸ்ட வீரர்கள்,மகளிர் அணிகள் கலந்து சிறப்பித்தது.
இதன்போது 60வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் கேக் வெட்டப்பட்டதுடன் கழக உறுப்பினர்களின் நினைவுமடல் கையொப்பம் இடல் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கல்வி ரீதியாகவும் தேசிய ரீதியான விளையாட்டு நிகழ்வுகளிலும் சாதனை படைத்த கழக வீரர்களும் கழக வீரர்களின் பிள்ளைகளும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் மட்டு.ஊடக அமையத்தின் தலைவருமான வா.கிருஸ்ணகுமார் அவர்களும் இதன்போது வாழ்த்துமடல் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.




