திருகோணமலை சம்பூர் பகுதியில் சோலார் மின்வலுத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாயிகளின் காணி தொடர்பாகவும் குச்சவெளி வளத்தாமலைப் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி தொடர்பான ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வு நேற்று (25) மாலை திருகோணமலை யுபிலி மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், கிழக்கு ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் ராஜசேகர், பிரதேச செயலாளர் மதிவண்ணன் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இசைதீன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், சட்டத்தரணிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
AHRC மற்றும் PCCJ நிறுவனங்களின் ஏற்பாட்டில் குறித்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.



