நிலாவெளி பிரதேச சுற்றுலா கடற்கரைரை சுத்தம் செய்யும் நிகழ்வும் மற்றும் நீருக்கடியில் சுத்தம் செய்யும் நிகழ்வானது இன்று (26) இடம் பெற்றது.
குறித்த நிகழ்வை திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம் கிராம மக்களும் கிராம அபிவிருத்தி சங்கம் பெருங்கடல் மீனவர் சங்கம் நன்னீர் கலப்பு சங்கம் மற்றும் நிலாவெளி உல்லாச பிரயாணியின் படகு சங்கம் உள்ளிட்ட பல அமைப்பினர் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், நிலாவெளி சுற்றுலா தளத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக காணப்படுகிறது.
இதன் போது நிலாவெளி கடற்கரையானது அதிகளவான வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரக்கூடியது இங்கிருந்தே புறாத் தீவை நோக்கியும் அதிக பயணிகள் செல்கின்றனர் இதனால் கடற் கரை சுத்தம் செய்வதனால் சிறந்ததொரு சுற்றுச் சூழலை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சுற்றுலா சங்க தலைவர் குச்சவெளி நிலாவெளி பொலிஸ் பொருப்பதிகாரிகள் வெளிநாட்டவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


