இந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழ்கின்ற ஈழமணித் திருநாட்டின் இயற்கை எழில்மிகு கிழக்கிலங்கையில் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்டுமாநகரின் வடபால் செந்நெல் வயலும் செந்தமிழ் மரபும் கனிகளோடு கறவையினப்பாலும் ஒருங்கே அமையப்பெற்று நல்விருந்து ஓம்பும் சீரிய சைவர் குலம் வாழும் நலன்மிகு பழம்பதியாம் வந்தாறுமூலைதனில் பன்நெடுங் காலமாக கோயில் கொண்டு அடியார்கள் குறை தீர்த்து, வேண்டும் வரங்களை வாரி வழங்கும் அன்னையாம் வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திப் பெருவிழா நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் வைகாசி 22ம் நாள் (05.06.2025) வியாழக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி வைகாசித் திங்கள் 26ம் நாள் (09.06.2025) திங்கட்கிழமை பி.ப 05.00 மணிக்கு திருக்குளிர்த்தியுடன் இனிதே நிறைவுறும் என்பதை சகல அடியார்களுக்கும் அறியத்தருகின்றோம்.
பூசைகள் விபரம்
05.06.2025 வியாழக்கிழமை: திருக்கதவு திறத்தல் # காவேரிகண்ட குடி மக்கள்
06.06.2025 வெள்ளிக்கிழமை : பகல் பூஜை #அத்தியா குடி மக்கள்
06.06.2025 வெள்ளிக்கிழமை : இரவுப் பூஜை # புதூர்க் குடி மக்கள்
07.06.2025 சனிக்கிழமை : பகல் பூஜை #கவுத்தன் குடி மக்கள்
07.06.2025 சனிக்கிழமை : இரவுப் பூஜை (திருக்கல்யாணம்/பச்சை கட்டு பூசை) #செட்டியார் குடி மக்கள்
08.06.2025 ஞாயிற்றுக்கிழமை : பகல் பூஜை # கழுவத்தன்# பனிக்கன் குடி மக்கள்
08.06.2025 ஞாயிற்றுக்கிழமை : இரவுப் பூஜை # மஞ்சள் #பரமக் குடி மக்கள்
09.06.2023 திங்கட்கிழமை : பகல் பூஜை (திருக்குளிர்த்தி) #பெரிய #பரமக் குடி மக்கள்
பக்த அடியார்கள் பக்தி சிரத்தையோடு ஆசார சீலர்களாக வருகை தந்து சிலம்பொலி தந்து உலகையே வியக்க வைத்த அற்புத அன்னை கண்ணகி அம்பாளின் திவ்விய திருவருள் பெற்றுய்யுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.
இவ்வண்ணம்
ஆலய பரிபாலன சபையினர்.


