553 வது இராணுவப் படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 9 பாடசாலை மாணவர்களுக்கான இரண்டு நாள் உதைபந்து பயிற்சி முகாம் முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயத்தில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று பயிற்சி முகாம் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.
553 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் பிரபாத் முத்துநாயக்கா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 55 வது படைப்பிரிவின் பதில் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ வனசேகர பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
குறித்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன், விசுவமடு மகா வித்தியாலய அதிபர், இராணுவ உயரதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இராணுவ அணிக்கும், விசுவமடு தோழர்கள் விளையாட்டுக்கழக அணிகளுக்குமிடையிலான உதைபந்து போட்டியும் நடைபெற்றது. குறித்த போட்டியில் இராணுவ அணி 2:0 என்ற கோல் கணக்கில் விசுவமடு தோழர்கள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


