பிங்கிரிய – வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியின் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தங்கியிருந்த விடுதியில் உயிரை மாயத்துக் கொண்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, நேற்று (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த களுத்துறை – வெலிகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், மாணவி உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், உயிரிழந்த மாணவியின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.