ஆந்திரா மாநிலம், பாபட்டலா மாவட்டம் ஸ்டுவர்ட்டுபுரத்தை சேர்ந்த 8 பேர் காரில் நந்தியாலா மாவட்டம் மகாநதியில் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று தரிசனம் முடிந்து காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். பிரகாசம் மாவட்டம் தடி செர்லா மோட்டு என்ற இடத்தில் கார் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்து கொண்டு இருந்த லாரியின் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.