• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 20, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வனத்துறையின் அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.!

Mathavi by Mathavi
May 22, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
வனத்துறையின் அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

வனத்துறை அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (22) சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நான் பேசிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் சம்பூர் கிராம சேவையாளர் பிரிவில் 40 விவசாயிகளுக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத்தையும், கிளிவெட்டி கிராமசேவகர் பிரிவில் 37 விவசாயிகளுக்கு சொந்தமான 85 ஏக்கர் நிலத்தையும், பாரதிபுரம் கிராமசேவகர் பிரிவில் 45 விவசாயிகளுக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலத்தையும், ஆசாத்நகர் கிராமசேவகர் பிரிவில் 70 விவசாயிகளுக்கு சொந்தமான 148 ஏக்கர் நிலத்தையும், தோப்பூர் கிராம சேவையாளர் பிரிவில் 60 விவசாயிகளுக்கு சொந்தமான 93 ஏக்கர் நிலத்தையும் என ஆக மொத்தம் 252 விவசாயிகளுக்கு சொந்தமான 693 ஏக்கர் நிலத்தை வனத்துறையானது தனது எல்லைக் கற்களை இட்டு பிடித்து வருவதோடு விவசாயிகளை விவசாயம் செய்ய விடாமல் தடுத்தும் வருகின்றது.

ADVERTISEMENT

இதைப் போலவே சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் தங்கநகர் கிராம சேவையாளர் பிரிவிலும் 85 விவசாயிகளுக்கு சொந்தமான 145 ஏக்கர் நிலத்தை எல்லைக் கற்களை போட்டு பிடித்துள்ளது. வனத்துறையின் இந்த செயற்பாட்டை உடன் நிறுத்த ஆவன செய்யுமாறு துறைசார் அமைச்சரைக் கேட்டுகொள்கிறேன்.

திருகோணமலை மாவட்டத்தில் நில வன்கவர்வு என்பது இப்பொழுது தோன்றிய பிரச்சினை அல்ல. 1983 ஆண்டு தொடக்கம் 2009 ஆண்டு வரை போர் நிலவிய காலத்தில் மக்கள் இடம் பெயர்ந்தனர். அவ்வேளையில் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவந்த நிலங்களை வனத்துறையும், வனவிலங்குத் துறையும் எல்லைக் கற்களை போட்டு பிடித்து வைத்துள்ளார்கள்.

எடுத்துக்கட்டாக திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் போர்க் காலத்திலே கைவிடப்பட்ட 205 சிறுகுளங்களையும் 25 அணைக் கட்டுகளையும் கொண்டமைந்த அண்ணளவாக 12000 ஏக்கர் நிலத்தை வனத்துறை எல்லைக் கற்களை போட்டு பிடித்து வைத்துள்ளது. இதன் மூலம் 24,000 மெற்றிக் தொன் நெல் உற்பத்தி இல்லாமல் போயுள்ளது .

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் பரப்பளவு 32,042 ஏக்கர் ஆகும். இதில் வனவிலங்குத் துறை 25,242 ஏக்கர் நிலத்தை தமக்கு உரியது எனவும் வனத் துறை 11,906 ஏக்கர் நிலத்தை தமக்கு உரியது எனவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். மொத்தம் 32,042 ஏக்கர் பரப்பளவு நிலத்தை கொண்ட வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் எப்படி 37,148 ஏக்கர் நிலத்தை கைபற்றினார்கள்? இப்படியான திறமை இந்த நாட்டில் உள்ள வனத்துறை மற்றும் வனவிலங்குத் துறை அதிகாரிகளைத் தவிர உலகில் வேறு யாருக்கும் இருக்க முடியாது என மக்கள் கேலி செய்கின்றனர்.

அதேபோன்று திருகோணமலை மாவட்டதில் உள்ள குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 29,430 ஏக்கர் நிலத்தை வனத்துறை கையகப்படுத்தி வைத்துள்ளது, மேலும் 28,372 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முனைகிறது. வனவிலங்குத் துறை 7,330 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது, தொல்பொருள் துறை 1,087 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது,

புத்த பிக்குகள் பூஜா பூமி என்ற பெயரில் 3,820 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் விவசாயம் செய்த 70,039 ஏக்கர் நிலம் நெல் உற்பத்தி செய்யாமல் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு போகத்தில் 140,000 மெற்றிக் தொன் நெல் உற்பத்தி குறைக்கப்படுகின்றது.

மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களது ஆட்சிக்காலத்தின் பொழுது 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் நெற் செய்கைக்குப் பயன்படுத்திய நிலங்களை நெற்செய்கைக்கு விடுவிக்கும்படி அரச ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் இதுவரையில் குறித்த ஆணை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
“ ஆசாரி விடை கொடுத்தாலும் பூசாரி விடை கொடுக்க மாட்டார்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதேபோல அரசாங்கம் முடிவு செய்தாலும் அரச அதிகாரிகள் அதனைச் செயற்படுத்துவதாக இல்லை. இதன் மூலம் இவர்கள் நாட்டின் நெல் உற்பத்தியை அதிகரிக்க விடாமல் தடுத்து அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனரா? என எண்ணத் தோன்றுகிறது. இதனை அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதேபோல தொல்பொருள் துறையும் மக்கள் விவசாயம் செய்த நிலங்களை தமது எல்லைக் கற்களைப் போட்டுப் பிடித்து வைத்துக்கொண்டு, அதனுள் தொல்பொருள் சின்னங்களைக் கண்டுபிடிக்க முடியாமலும் அதேவேளை அதனுள் மக்களை விவசாயம் செய்ய விடாமலும் தடுத்து வருகின்றது.

எடுத்துக் காட்டாகத் திரியாய் கிராமத்தில் உள்ள ஏறத்தாள ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தினைக் கையகப்படுத்தி எல்லைக் கற்களை போட்டு மூன்று, நான்கு ஆண்டுகளாக பிடித்து வைத்துள்ளனர். எனினும் அப் பகுதியில் எதுவித தொல்பொருள் சின்னங்களையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுடன் அந்த நிலத்தை மீள மக்களுக்கு விவசாயம் செய்ய வழங்கவும் மனம் இன்றி இருக்கின்றனர். இதனால் நெல் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது.

முடிவாக திருகோணமலை மாவட்டத்திலே 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் விவசாயம் செய்த 118,710 ஏக்கர் நிலத்தை வனத் துறையினரும் 111,619 ஏக்கர் நிலத்தை வன விலங்குத் துறையினரும் 2,599 ஏக்கர் நிலத்தை தொல் பொருள் துறையினரும் பூஜா பூமி, பூஜாக் கொடை என்னும் பெயர்களில் ஏறத்தாழ 3,820 ஏக்கர் நிலத்தை புத்த பிக்குமாரும் ஆக மொத்தம் மக்கள் விவசாயம் செய்த 236,748 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். இதன் மூலம் ஒரு போகத்தில் மட்டும் ஏறத்தாழ ஐந்து இலட்சம் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி இல்லாமல் போகின்றது. இதை இந்த அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இதனை விடுவிப்பதன் மூலம் ஐந்து இலட்சம் மெற்றிக் தொன் நெல் உற்பத்தியை அதிகரிக்க ஆவன செய்யவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் .

இதேபோல வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் முதன்மையான சிக்கலாக மேய்ச்சல் தரைப் பிரச்சனை காணப்படுகின்றது, வனவிலங்குத் துறையானது மரபு வழியாகக் கால்நடை வளர்ப்பாளர் பயன்படுத்தி வந்த அங்கொடை, மாவிலாறு பகுதி உள்ளிட்ட மேய்ச்சல் தரைகளைப் பிடித்து வைத்துக்கொண்டு, இந்த இடத்தில் காட்டுவிலங்குகள் மட்டும் மேயலாம் ஆனால் வீட்டு விலங்குகள் மேயமுடியாது என தடுத்து வருகின்றது. 2008 ஆம் ஆண்டில் 600 கால்நடை வளர்ப்பாளர்களும் 28,000 கால்நடைகளும் வெருகல் கோட்டத்தில் காணப்பட்ட வேளையில், போதிய உணவு இன்றி நோயினால் பாதிக்கப்பட்டு சில ஆயிரம் கால்நடைகள் இன்று இறந்து போயுள்ள சூழலில், இப்பொழுது 15,200 கால்நடைகள் மட்டுமே எஞ்சி உள்ளன. கால்நடைகளின் இழப்பிற்கும், கால்நடை வளர்ப்பாளர்களின் பொருளாதார இழப்பிற்கும் பொறுப்பு கூறுவது யார் ? இத்தகைய சிக்கல் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகாமம், கிண்ணியா, குச்சவெளி, மொறவெவ முதலிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மேற்கூறிய விடயங்களை கவனத்தில் எடுத்து 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு விவசாயிகள் பயிர் செய்த நிலங்களையும், நீர் நிலைகள் அமைந்துள்ள நிலங்களையும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையையும் விரைவாக விடுவித்து நீர்ப்பாசனத் திட்டங்களைச் சீர்செய்து நாட்டின் நெல் உற்பத்தியையும் கால்நடைகளின் வளத்தையும் பெருக்க ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு எனது உரையை நிறைவு செய்கின்றேன் என்றார்.

Related Posts

கெஹெலிய வழக்கு விவகாரம் ; அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

கெஹெலிய வழக்கு விவகாரம் ; அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

by Thamil
June 19, 2025
0

கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் முக்கிய அறிக்கையொன்று இன்று (19) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து...

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

by Thamil
June 19, 2025
0

அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல் இன்று 2025.06.19 இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவரும், அரசியலமைப்பு பேரவை...

மாநகர சபை முதல்வர் பதவி சுழற்சிமுறையில் ரெலோவிற்கு..!

மாநகர சபை முதல்வர் பதவி சுழற்சிமுறையில் ரெலோவிற்கு..!

by Thamil
June 19, 2025
0

வவுனியா மாநகரசபையின் முதல்வர் பதவி மூன்று வருடங்களின் பின்னரான காலப்பகுதியில் ரெலோவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் இ.விஜயகுமார்(புரூஸ்) தெரிவித்தார்....

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் யாழில் 160 போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுதுமலை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே போதை...

திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் சேர்ப்பித்தவேளை உயிரிழந்துள்ளார். இதன்போது காரைநகர் - களபூமியைச் சேர்ந்த கேதீஸ்வரன்...

குடை சாய்ந்த உழவு இயந்திரம்..!

குடை சாய்ந்த உழவு இயந்திரம்..!

by Thamil
June 19, 2025
0

இன்று (19) நுவரெலியா - உடபுஸ்ஸல்லாவ வீதியில் உள்ள ஹல்கிரானோயா பகுதியில் தேயிலை தொழிற்சாலைக்குச் சொந்தமான உழவு இயந்திரம் ஒன்று குடை சாய்ந்தது. இடம்பெற்ற இவ் விபத்தில்...

வத்திராயனில் இடம்பெற்ற இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டம்..!

வத்திராயனில் இடம்பெற்ற இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டம்..!

by Thamil
June 19, 2025
0

வடமராட்சிக் கிழக்கு வத்திராயன் சொலிட் இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் இன்று (19) இடம்பெற்றது. இன்று மாலை 4.00 மணிக்கு வடமராட்சி கிழக்கு வத்திராயன்...

வன விலங்குகளால் ஏற்படும் விவசாய சேதங்கள் தொடர்பான கலந்துரையாடல்..!

வன விலங்குகளால் ஏற்படும் விவசாய சேதங்கள் தொடர்பான கலந்துரையாடல்..!

by Thamil
June 19, 2025
0

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர்...

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்..!

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் (19) குருநகர் வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா கலந்த மாவா வைத்திருந்த 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி