நிலையான விவசாயத்திற்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் (2nd International conference on Digital Teachnologies For Sustainable Agriculture) இரண்டாவது சர்வதேச மாநாடு யாழ் பல்கலைக்கழக விவசாய பீட கேட்போர் கூடத்தில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
இன்றைய முதல் நாள் ஆரம்ப நிகழ்வு யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீ சற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. குறித்த மாநாட்டில் சிறப்பு பேச்சாளர்களாக பேராசிரியர் டி.ஏ.என். தர்மசேன (பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழக விவசாய மற்றும் பொறியியல் துறைத் தலைவர் மெய்நிகர் (Zoom) ஊடாக உரையாற்றிருந்தார்.
சிறப்பு பேச்சாளர்களாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் D.A.N தர்மசேன (Head of the department of Agricultural Engineering university of peradeniya மெய்நிகர் (ZOOM) ஊடாக தனது கருத்துக்களை முன்வைத்தார்.
பேராசிரியர் Gulistan Raja ( Dean faculty of Electronics & Electrical Engineering, UET Taxila (பாகிஸ்தான்) நிகழ்வில் கலந்து கொண்டு நிலையான விவசாயத்திற்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தொடர்பாக உரையாற்றிருந்தார்.
குறித்த மாநாட்டில் இந்தியா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், யாழ் பல்கலைக்கழக பீடங்களின் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஏனைய பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.







