அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழும் ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் கடலில் கொள்ளையிடப்படுவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை திகமடுல்ல மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் மற்றும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவருமான கௌரவ ஏ. ஆதம்பாவா (பா.உ) அவர்கள் நேற்று (21/05/2025) கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகரன் (பா.உ) அவர்களையும், கௌரவ பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் ஓய்வு பெற்ற அருண ஜயசேகர அவர்களையும் சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடினார்.
அத்துடன் அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படும் என்றும் அவர்களால் உறுதியளிக்கப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியினுடைய கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.