• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 18, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இனப்படுகொ லை நினைவுத்தூபி அமைப்பு காலப் பெறுமதி மிக்க செயல் : கனேடியத் தூதுவரிடம் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு..!

Sangeetha by Sangeetha
May 21, 2025
in இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்
0 0
0
இனப்படுகொ லை நினைவுத்தூபி அமைப்பு காலப் பெறுமதி மிக்க செயல் : கனேடியத் தூதுவரிடம் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு..!
Share on FacebookShare on Twitter

கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் அவர்களிடம் கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளார்.

மேற்குறித்த நினைவுத் தூபி அமைப்புக்கு நன்றி தெரிவித்து கனேடியப் பிரதமர் மார்க் ஹானி அவர்களுக்கும், பிரம்டன் நகர மேஜர் பற்றிக் பிரவுண் அவர்களுக்கும் கடந்த 19ஆம் திகதி மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்களின் பிரதியே இன்றையதினம் கனேடியத் தூதுவரிடம் சிறீதரன் எம்.பியால் நேரில் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ADVERTISEMENT

இலங்கைத்தீவின் அளவிற் சிறிய தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படும் தமிழ்த்தேசிய இனம் மீது, இலங்கை அரசால் வலிந்து மேற்கொள்ளப்பட்ட மனிதப் பேரவலத்தை ‘இனப்படுகொலை’ என்று ஏற்றுக்கொண்ட முதலாவது நாடான கனடாவின் பிரம்டன் நகரில், தமிழினப் படுகொலை நினைவுத்தூபி நிறுவப்பட்டு, வலிசுமந்த மாதமான மே மாதத்தில்; திறந்துவைக்கப்பட்டுள்ளமை, பாதிக்கப்பட்ட எமது மக்களின் மனக்காயங்களுக்கு மருந்தாய் அமைந்துள்ளதை நன்றியோடு பதிவுசெய்கிறேன்.

ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட போரின் அறமீறல்கள் குறித்தும், போர் முடிவுற்றதன் பின்னரான கடந்த 15 ஆண்டுகளில் எமது மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் மீதும், கூட்டுப் பண்பாடுகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகள் தொடர்பிலும்; கரிசனையோடிருக்கும் கனேடிய அரசினால், ஈழத் தமிழினம் சார்ந்து சமகாலத்தில் முன்னகர்த்தப்படும் காத்திரமான செயல்களும், அறிவிப்புகளும் சர்வதேச அரங்கிலும், தமிழ் மக்கள் மனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உணரமுடிகிறது.

தங்கள்; மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு பரிகார நீதியைக் கோரிநிற்கிற எங்கள் இனம், கடந்த 15 ஆண்டுகளாக ஏமாற்றங்களை மட்டுமே எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. இலங்கைத் தீவில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை தான் என்பதை ஏற்றுக்கொள்ளத் தலைப்படாத உலக அரங்கில், ‘இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே’ என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதோடு, இறுதிப்போரின் போது கொல்லப்பட்டோருக்காகவும், மனித உரிமை மீறல்களைச் சந்தித்தோருக்காகவும் தொடர்ந்து நீதிகேட்கும் கனடா, தனது நாட்டின் முதன்மை நகரான பிரம்டனில் ஈழத்தமிழர்களின் அரசியல் தாகத்தை சொல்லும் தமிழீழக் குறியீட்டுடன் கூடிய நினைவுத்தூபியை நிறுவியமையும், தமிழ் இனப் படுகொலையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கனடாவிலிருந்து தாராளமாக வெளியேறலாம் என்ற பிரம்டன் நகர மேயரின் அறிவிப்பும் ஈழத்தமிழர்களுக்கான நீதியின் முகமாக கனடாவை அடையாளப்படுத்தியிருக்கிறது.

ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் நேரடிக் குற்றவாளிகளான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மற்றும் இராணுவப் பின்புலம் கொண்டவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தமை, தமிழினப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு, நினைவுத்தூபி அமைப்பு, உயிர் அச்சுறுத்தல்களால் புலம்பெயரும் ஈழ அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கல் என ஈழத்தமிழர்கள் சார்ந்து தங்களால் முன்னெடுக்கப்படும் அத்தனை செயல்களும், எமது இனத்தின் அரசியல் விடுதலையில் கனடா நாட்டின் பங்களிப்பு கனதிமிக்கதாக இருக்கும் என்ற பரிபூரண நம்பிக்கையை எமக்கும் எமது மக்களுக்கும் வழங்கியிருக்கிறது.

அந்த நம்பிக்கைக்கான சாட்சியமாக, இனப்படுகொலைக்கான நீதியைப் பெறுவதிலும், எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகளிலும் தங்களது இராஜதந்திர வழிகாட்டுதல்கள் மற்றும் மூலோபாயங்கள் எமக்கு துணைசெய்யும் என்ற நம்பிக்கையின் செய்தியாக, மீளவும் ஈழத்தமிழர்கள் சார்பிலான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். – என்றுள்ளது.

Related Posts

வைத்தியசாலை மருந்து விற்பனை விவகாரம் ; மூவருக்கு விளக்கமறியல்..!

வைத்தியசாலை மருந்து விற்பனை விவகாரம் ; மூவருக்கு விளக்கமறியல்..!

by Thamil
June 17, 2025
0

வைத்தியசாலை மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் உட்பட மூன்று சந்தேக...

அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூக மன்றக் கலந்துரையாடல்..!

அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூக மன்றக் கலந்துரையாடல்..!

by Thamil
June 17, 2025
0

உளவளத்துணை மற்றும் உள சமூக பணிகளை மேற்கொள்ளும் அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூக மன்றக் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம்...

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் சீராக வழங்கப்பட்டு வருகின்றது..! 

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் சீராக வழங்கப்பட்டு வருகின்றது..! 

by Thamil
June 17, 2025
0

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 115,000 லீற்றர் பெற்றோல் தேவை என கணிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் (17) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 264,000 லீற்றர்...

ரயில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழப்பு..!

ரயில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழப்பு..!

by Thamil
June 17, 2025
0

இன்று (17) மாலை இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த நிலையில் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த தலையசிங்கம் சுதாகரன் (வயது...

முல்லைத்தீவில் தீ பரவும் அபாயம் ; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

முல்லைத்தீவில் தீ பரவும் அபாயம் ; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

by Thamil
June 17, 2025
0

முல்லைத்தீவு - வண்ணங்குளம் ஜி.என் பிரிவில் புதர்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தீ பரவியுள்ள இடமானது பனை மரங்களுக்கு அருகில் உள்ளதால், தற்போதைய காற்று சூழ்நிலையைப்...

குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு ; பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு ; பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

by Thamil
June 17, 2025
0

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். நெடுந்தீவு 3ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த இராமநாதன் முத்துலிங்கம்...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

by Thamil
June 17, 2025
0

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் இன்று (17) எரிபொருள் தாங்கி ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் பலத்த காயங்களுக்கு...

யாழில் மயங்கிய இளைஞன் ஒருவன் உயிரிழப்பு..!

யாழில் மயங்கிய இளைஞன் ஒருவன் உயிரிழப்பு..!

by Thamil
June 17, 2025
0

யாழில் உணவு அருந்திவிட்டு இருந்த இளைஞர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார். பழைய புகையிரத நிலைய வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் எனோ...

ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

by Thamil
June 17, 2025
0

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனைவரையும் மிகுந்த எச்சரிக்கையின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி