சர்வதேச தேயிலை தினத்தினை முன்னிட்டு இன்று (21) கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பெரியசாமி முத்துலிங்கம் தலைமையில் மலையக மக்களின் தீர்க்கப்படாத அடிப்படை பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு ஏற்புரை செய்யும் நோக்கில் நுவரெலியா சினி சிட்டா மண்டபத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பதாதைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பி மக்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மலையகம் 200இன் போது முன்வைக்கப்பட்ட காணி உரிமை, வீட்டு உரிமை, சம்பளம் அதிகரிப்பு உள்ளிட்டு விடயங்களை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து சிரிச்சிட்டா மண்டபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மலையக தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள், அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




